பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். காங்கிரஸ், பிஜேபி ஆகிய வலுவான கட்சிகள் 117 தொகுதிகளில் போட்டியிட உள்ள சூழலில், தற்போது அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியில் குதித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், மக்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்.
மேலும் படிக்க!
காணுங்கள் சன் டிவி சீரியல்கள் EPISODE-களை டிவியில் ஒளிபரப்பாவதற்க்கு முன்பே இங்கு!!
சன் டிவி சீரியல்கள் - CLICK HERE ✋
அந்தவகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், ‘பஞ்சாப் வளர்ச்சி மற்றும் வளம் பெறுவதற்கு 10 அம்ச 'பஞ்சாப் மாடல்' திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்.
ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சி ஏற்படுத்துவதுடன், வேலை தேடி கனடாவிற்கு சென்றவர்கள், அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் சொந்த ஊர் திரும்புவார்கள்.போதை கூட்டணியை உடைப்பதுடன், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அனைவருக்கும் இலவச சிகிச்சை, வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் இலவச மின்சாரம்,18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ. ஆயிரம் நிதியுதவி ஆகியவை வழங்கப்படும்’ என அப்போது கூறினார்.
முழு விவரம் இதோ!! 👇👇👇👇
Post a Comment