1 / 5
Sundari Serial Latest Epsiodes!
2 / 5
Sembaruthi Serial Latest Episodes Here
3 / 5
Sathya Serial Latest Epsiodes Here
4 / 5
Kayal Serial Lastest Episodes Here
5 / 5
Oru Orla 2 Rajakumari Serial Lastest Episodes Here!

வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட புகழ்

 விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்ற புகழுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு. தலைநிறைய சுருட்டை முடி, அசால்டாக அடிக்கும் காமெடி என நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருந்தார்.



புகழ், சிவாங்கி இவர்களின் அண்ணன், தங்கை காம்போ ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் நடிக்க புகழுக்கு வாய்ப்பு கிடைத்தது. அஜித்தின் வலிமை படத்தில் புகழ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரில் புகழ் கைகளை கட்டிக்கொண்டு அஜித்தின் பின்னால் நடந்து வருவது போன்ற காட்சிகள் வெளியாகியிருந்தது.


இதைதொடர்ந்து முகக்கவசம் முத்தம் படத்திலும் புகழ் நடித்துள்ளார். தற்போது திரைப்படங்கள் பிஸியாக உள்ளதால் குக் வித் கோமாளி சீசன் 3 இல் புகழ் பங்கு கொள்வாரா என்பது கேள்விக்குறிதான். அவரது ரசிகர்கள் புகழ் இருந்தால்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்போம் என்ற அளவுக்கு வெறித்தனமாக உள்ளார்கள்.


மேலும் படிக்க!‌

சன் டிவி சீரியல்கள் - CLICK HERE ✋


ஜீ தமிழ் சீரியல்கள் - CLICK HERE ✋


யூட்யுப் சேனல் - SUBSCRIBE ✋


இந்நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, பவித்ரா என பல நடிகைகளுடன் புகழ் பண்ணும் சேட்டைகள் வைரலாகும். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் புகழ் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார். பவித்ராவுடன் நெருங்கி பழகி  வந்தார் புகழ் ஆனால் அவர் ஜோடி இல்லை என்பதை உறுதி செய்து விட்டார். இன்று புகழுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு லவ் யு பாட்னர், ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார்.


OFFICIAL VIDEO 👇


இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் புகழின் வருங்கால மனைவி தான் இவரா என நினைத்து வருகிறார்கள். ஆனால் சிவாங்கி ஹாப்பி பர்த்டே அக்கா என பதிவிட்டு இருக்கிறார். ஆனால் புகழின் ரசிகர்கள் அக்கா இல்லை அண்ணி என கலாய்த்து வருகிறார்கள்.


அன்மையில் புகழ் பைக்கில் போகும்போது பின்னால் ஒரு பெண் கை வைப்பது போன்ற வீடியோ வெளியாகி இருந்தது. அந்தப் பெண் பென்ஸ் ரியா தான். மைனா நந்தினி கணவர் யோகி புகழின் காதலி ரியா என்பதை உறுதி செய்யும் வகையில் கமெண்ட் செய்திருந்தார். ஆனால் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் புகழ் இன்னும் கூறவில்லை.


இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Sports News), அண்மை செய்திகள் (Latest Tamil News, Breaking News, Serial Updates) என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் Tamil News 366 இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.




0 Comments

Post a Comment

Your thoughts (0)

Previous Post Next Post